< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மாவீரம் போற்றுதும்... மாவீரம் போற்றுதும்: தவெக தலைவர் விஜய்
|27 Nov 2024 6:13 PM IST
மாவீரம் போற்றுதும்... மாவீரம் போற்றுதும் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இலங்கையில் ஈழ விடுதலைக்கு பாடுபட்டு உயிர் நீத்தவர்களின் நினைவாக உலகம் முழுவதும் மாவீரர்கள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 27ம் தேதி (இன்று) கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் மாவீரர் தினம் கடைபிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இலங்கையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில் மாவீரர் தினம் அனுசரிக்க தடையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உலகம் முழுவதும் இன்று மாவீரர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாவீரர் தினத்தையொட்டி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், மாவீரம் போற்றுதும்... மாவீரம் போற்றுதும்' என பதிவிட்டுள்ளார்.