< Back
தமிழக செய்திகள்

தமிழக செய்திகள்
வஞ்சகக் கூட்டம் கதறக் கதற தமிழ்நாடு முன்னேறிக் கொண்டே இருக்கும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

27 March 2025 9:41 AM IST
வஞ்சகக் கூட்டம் கதறக் கதற தமிழ்நாடு முன்னேறிக் கொண்டே இருக்கும் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
சென்னை,
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
மின்னணு துறையில், இந்த நிதியாண்டு பிப்ரவரி மாதம் வரை தமிழ்நாடு தேசிய ஏற்றுமதியில் 37 சதவீதத்தை ஏற்றுமதி செய்து பெரும் சாதனை படைத்துள்ளது. 2-ம் இடத்தில் கர்நாடகம் 20 சதவீதம் பங்குடன் உள்ளது. ஆந்திரா 10-வது இடத்தில் உள்ளது. 2021ல் 1.86 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஏற்றுமதி, திராவிட மாடல் ஆட்சியில் மளமளவென வளர்ந்து, இன்று 12.5 பில்லியன் அமெரிக்க டாலரை தாண்டி உயர்ந்து வருகிறது.
நாம் நாடுகளுடன் போட்டிபோட்டு முதலீடுகளை ஈர்க்கிறோம். சிலர் நம்மை விட பின்தங்கியுள்ள மாநிலங்களுடன் ஒப்பீடு செய்ய முயல்கிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க நினைக்கும் வஞ்சகக் கூட்டம் கதறக் கதற தமிழ்நாடு முன்னேறிக் கொண்டே இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.