< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'தமிழக அரசு திவாலாகும் நிலை ஒருபோதும் வராது' - சபாநாயகர் அப்பாவு
|24 Dec 2024 10:10 PM IST
கடன் சுமையால் தமிழக அரசு திவாலாகும் நிலை ஒருபோதும் வராது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லை,
நெல்லை ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"தி.மு.க. 2021-ல் ஆட்சி பொறுப்பை ஏற்கும்போது தமிழக அரசுக்கு ரூ.4.56 லட்சம் கோடி கடன் இருந்தது. தற்போதைய அரசு அந்த கடன் தொகைக்கு வட்டியும் கட்டுகிறது, கடன் தொகையை திருப்பியும் செலுத்துகிறது. கடந்த ஆண்டு ரூ.49,000 கோடி கடன் திருப்பி செலுத்தப்பட்டது. இப்போது தமிழக அரசுக்கு ரூ.8.33 லட்சம் கோடி கடன் இருக்கிறது.
15-வது நிதிக்குழு ஒரு இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. அந்த இலக்கிற்கு உட்பட்டுதான் இந்த கடன் இருக்கிறது. தமிழக அரசு திவாலாகும் என்பது சிலரின் ஆசையாக இருக்கலாம். ஆனால் கடன் சுமையால் திவாலாகும் நிலை தமிழக அரசுக்கு ஒருபோதும் வராது."
இவ்வாறு அப்பாவு தெரிவித்தார்.