தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி விரைவில் மாற்றம்?
|தமிழக கவர்னர் விரைவில் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டின் கவர்னராக ஆர்.என்.ரவி பதவி வகித்து வருகிறார். அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை தெரிவிப்பது, அரசு ஆவணங்களுக்கு பதில் அளிக்க காலதாமதம் செய்வது என ஆளும் அரசின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற இந்தி மாத கொண்டாட்ட விழாவில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடலில் மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில், தமிழகத்திற்கான கவர்னர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், கவர்னர் ஆர்.என். ரவிக்கு பதிலாக தமிழ்நாட்டின் புதிய கவர்னராக வி.கே. சிங் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஏராளமான தேர்தல்களில் மேலிட பொறுப்பாளராக பணியாற்றியவர், முன்னாள் மத்திய மந்திரி என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் வி.கே. சிங் என்பது குறிப்பிடத்தக்கது.