< Back
மாநில செய்திகள்
சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவு

தினத்தந்தி
|
25 Jan 2025 5:16 PM IST

சாத்தனூர் அணையில் இருந்து 27-ந்தேதி முதல் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையில் இருந்து 2025-ம் ஆண்டிற்கு சாத்தனூர் இடது மற்றும் வலதுபுறக் கால்வாய்களின் பாசன நிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு முறையே 320 கனஅடி / வினாடி மற்றும் 200 கனஅடி / வினாடி, மொத்தம் 520 க.னஅடி / வினாடி வீதம் 27.01.2025 முதல் 17.05.2025 வரை 110 நாட்களுக்கு தொடர்ச்சியாக 4,942 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட்டும், திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு நிலங்களுக்கு உரிமை நீர் 1,200 மில்லியன் கனஅடி (மொத்தம் 4,942 + 1,200 = 6,142 மில்லியன் கனஅடி தண்ணீர் பாசனத்திற்கு தேவை) நீரினை நீர் பங்கீடு விதிகளின்படி ஏப்ரல் 30-க்குள் விவசாயிகளின் கோரிக்கைப்படி தேவைப்படும்பொழுது மூன்று தவணைகளில் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் சாத்தனூர் இடது மற்றும் வலதுபுறக் கால்வாய் பாசனப்பரப்பு 45,000 ஏக்கர் மற்றும் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பாசன பரப்பு 5,000 ஏக்கர் என ஆக மொத்தம் 50,000 ஏக்கர் பாசனபரப்புகள் பாசனவசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்