< Back
மாநில செய்திகள்
150 செ.மீ உயரம் இருந்தால் பெண் நடத்துநர் பணி: அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு
மாநில செய்திகள்

150 செ.மீ உயரம் இருந்தால் பெண் நடத்துநர் பணி: அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு

தினத்தந்தி
|
13 Feb 2025 2:12 PM IST

அரசு பஸ் பெண் நடத்துநராக தேர்வாவதற்கான குறைந்தபட்ச உயரம் 150 செ.மீ.ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பெண் நடத்துநர் அதிக எண்ணிக்கையில் தேர்வாவதை உறுதி செய்யும் வகையில் புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி பஸ் நடத்துநர் பணிக்கு தேர்வாகும் பெண்களுக்கான உயரத்தை, 160 செ.மீ-ல் இருந்து 150 செ.மீ-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்பால் பணிக்காலத்தில் உயிரிழந்தோரின் பெண் வாரிசுதாரர்களுக்கு நடத்துநர் பணி அதிகம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக விரைவு போக்குவரத்துக் கழகத்தை தவிர்த்து இதர போக்குவரத்துக் கழகங்களில் பெண் நடத்துநருக்கான உடல்தகுதியில் குறைந்தபட்ச உயரம் 150 செமீ என நிர்ணயிக்க வேண்டும் என போக்குவரத்துத் துறைத் தலைவர் அலுவலகம் கேட்டுக் கொண்டது. இதை கவனமாக பரிசீலித்த அரசு, ஆண் நடத்துநருக்கான குறைந்தபட்ச உயரம் 160 செமீ, பெண் நடத்துநருக்கான உயரம் 150 செமீ, இரு பாலினத்தவருக்கும் குறைந்தபட்ச எடை 45 கிலோ என பொதுசேவை விதிகளில் வரையறுத்துள்ளது.

மேலும் செய்திகள்