< Back
மாநில செய்திகள்
இலங்கை அரசின் புதிய முடிவால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி

கோப்புப்படம்

மாநில செய்திகள்

இலங்கை அரசின் புதிய முடிவால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி

தினத்தந்தி
|
20 Nov 2024 9:36 AM IST

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் படகுகள் தொடர்பாக இலங்கை அரசு புதிய முடிவு எடுத்துள்ளது.

கொழும்பு,

தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் படகுகள் தொடர்பாக இலங்கை அரசு புதிய முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி தமிழக மீனவர்களின் படகுகளை கடற்படையினர் பயன்படுத்திக்கொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னாரில் இருந்து 5 படகுகள், யாழ்பாணத்தில் இருந்து 8 படகுகள் என மொத்தம் 13 படகுகள் இலங்கை கடற்படையின் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் மன்னார், மயிலட்டி துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை அரசின் இந்த புதிய முடிவால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக பறிமுதல் செய்யப்படும் படகுகளை மீண்டும் மீனவர்களிடம் ஒப்படைக்கக் கோரி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்