< Back
மாநில செய்திகள்
தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் மருத்துவமனையில் அனுமதி
மாநில செய்திகள்

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் மருத்துவமனையில் அனுமதி

தினத்தந்தி
|
3 March 2025 10:37 PM IST

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள். இவருக்கு இன்றிரவு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது.

இதனால், உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்