< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

தமிழக வேளாண் பட்ஜெட்: ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்

தினத்தந்தி
|
15 March 2025 8:56 AM IST

தமிழக வேளாண் பட்ஜெட்டில் வெளியிடப்படும் அறிவிப்புகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 15 March 2025 11:24 AM IST

    வரும் நிதியாண்டில் வேளாண் துறைக்கு மொத்தமாக ரூ.45,661.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்-  அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்

  • 15 March 2025 11:11 AM IST

    வேளாண் விளை பொருட்களுக்கான 100 மதிப்புக்கூட்டு மையங்கள் ரூ.50 கோடியில் அமைக்கப்படும். ரூ 15 இலட்சத்தில் நல்லூர் வரகு (கடலூர்), வேதாரண்யம் முல்லை (நாகப்பட்டினம்), நத்தம் புளி (திண்டுக்கல்), ஆயக்குடி கொய்யா (திண்டுக்கல்), கப்பல்பட்டி கரும்பு முருங்கை (திண்டுக்கல்) ஆகிய 5 வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படும்.

    ரூ.1.35 கோடியில் காலநிலை மாற்றத்தினால் விவசாயம் மற்றும் சுற்றுசூழலில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள திறனுடைய கிராமங்கள் உருவாக்கப்படும். ரூ.6.16 கோடியில் சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகங்கள் அமைக்கப்படும். ரூ.1 கோடியில் வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான " "டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி" உருவாக்கப்படும்- அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்



  • 15 March 2025 10:54 AM IST

    "50 உழவர் சந்தைகள் தேர்வு செய்யப்பட்டு 10 கோடியில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

    *வட்டாரங்கள் தோறும் தேர்வு செய்யப்பட்ட மையங்களில் வேளாண் விளை பொருட்கள் விறப்னை செய்யப்படும்.

    *உழவர்களுக்கு 10 லட்சம் வரை முதலீட்டு கடன் வழங்கப்படும்- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

  • ஊரக பகுதிகளில் காளான் உற்பத்தி நிலையம்!
    15 March 2025 10:35 AM IST

    ஊரக பகுதிகளில் காளான் உற்பத்தி நிலையம்!

    புரதசத்து நிறைந்த காளான் உற்பத்தியை ஊக்குவிக்க ஊரக பகுதியில் 5 காளான் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பு

  • 15 March 2025 10:28 AM IST

    காய்கறிகள் விதை தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். பழச் செடி தொகுப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும்.பயிர் வகை விதை தொகுப்பு 1 லட்சம் இல்லங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். புரதச்சத்து நிரைந்த காளாண் உற்பத்தியை ஊக்குவிக்க ஊரக பகுதியில் 5 காளாண் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

  • வேளாண் பட்ஜெட்: இதுவரை இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:
    15 March 2025 10:24 AM IST

    வேளாண் பட்ஜெட்: இதுவரை இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:

    * 1,000 முதல்-அமைச்சர் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும்

    * மானாவாரி நிலங்களில் மண் வளத்தை மேம்படுத்த 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை உழவு திட்டத்துக்கு ரூ.24 கோடி.

    * டெல்டா அல்லாத பயிர் சாகுபடியை அதிகரிக்க 102 கோடி ஒதுக்கீடு

    * மக்காச்சோளம் உற்பத்தி மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.40.27 கோடி

    * மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில் வேளாண் எந்திரம் உள்ளிட்டவை வழங்க ரூ.22.80 கோடி ஒதுக்கீடு

    * இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.12 கோடியில் திட்டம்

    * ரூ.108 கோடியே 6 லட்சம் செலவில் உணவு எண்ணெய்த் தேவையில் தன்னிறைவு அடைய எண்ணெய் வித்துகள் இயக்கம்

    * ரூ.52 கோடியே 44 லட்சம் செலவில் சிறுதானியப் பயிர்களின் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்

    * வேளாண்மையில் அதிக உற்பத்தி மற்றும் புதிய தொழில் நுட்பங்களை கண்டறியவும் விவசாயிகளுக்கு பரிசுகள்.

    * உழவர்களை அவர்களது கிராமங்களிலேயே சந்தித்து, தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கிட உழவரைத் தேடி வேளாண்மை திட்டம்

    * மண்வளத்தினை மேம்படுத்திட முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்துக்கு ரூ.142 கோடி ஒதுக்கீடு.

    * உயிர்ம விளைபொருட்களில் எஞ்சிய நச்சு மதிப்பீடு பரிசோதனைக் கட்டணத்திற்கு உழவர்களுக்கு முழு மானியம்.

    * 30 லட்சம் உழவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகையாக ரூ.5,242 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    * பசுமைத் தமிழ்நாட்டை உருவாக்க, "தமிழ்நாடு வேளாண்காடுகள் கொள்கை"

    * ரூ.297 கோடியில் கரும்பு உழவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை.

    *நீர் ஆதாரத்தை திறம்பட பயன்படுத்துவதற்காக, மூன்று இலட்சம் ஏக்கர் பரப்பில் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க ரூ.1.168 கோடி

  • 15 March 2025 10:16 AM IST

     "சூரியகாந்தி, ஆமணக்கு எண்ணெய் உள்ளிட்ட வித்து பயிர்கள் வளர்ச்சியை அதிகரிக்கும் விதமாக, 2 லட்சம் ஏக்கர் பரப்பில் ரூ. 108 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.இதன் மூலம், 7.14 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 90 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவர்.முதலமைச்சர் மன்னுயிர் காப்போம் திட்டம், ரூ. 146 கோடி செலவில் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும். கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 2,335 ஊராட்சியில் ரூ. 269 கோடியில் செயல்படுத்தப்படும். ஏற்கனவே இத்திட்டம் 10,157 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டது" - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

  • 15 March 2025 10:05 AM IST



  • 15 March 2025 10:05 AM IST

     "முதலமைச்சர் மன்னுயிர் காப்போம் திட்டம், ரூ. 146 கோடி செலவில் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும். கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 2,335 ஊராட்சியில் ரூ. 269 கோடியில் செயல்படுத்தப்படும். ஏற்கனவே இத்திட்டம் 10,157 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டது. 1000 இடங்களில் 'முதலமைச்சர் உழவர் நல சேவை மையம்' அமைக்கப்படும்.

    முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும். நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்திற்கான இழப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்வு.இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20,000ல் இருந்து ரூ.30,000 உயர்த்தப்படும்.இறுதி சடங்கு நிதி உதவி ரூ. 2,500ல் இருந்து ரூ. 10,000 உயர்வு" - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

  • 15 March 2025 9:50 AM IST

    30 லட்சம் உழவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. பயிர் கடன் ரூ. 3.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2021-24 வரை, 147 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் நீர் பாசன பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரியதால், 89.90 லட்சமாக இருந்த பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.

    கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 215 ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டத்தில் 431 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறி உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளன- அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்

மேலும் செய்திகள்