< Back
மாநில செய்திகள்
தாம்பரம் - திருச்சி அதிவிரைவு சிறப்பு ரெயில் ரத்து

கோப்புப்படம்

மாநில செய்திகள்

தாம்பரம் - திருச்சி அதிவிரைவு சிறப்பு ரெயில் ரத்து

தினத்தந்தி
|
19 Dec 2024 11:40 PM IST

தாம்பரம் மற்றும் திருச்சி இடையிலான அதிவிரைவு சிறப்பு ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தாம்பரத்தில் இருந்து வரும் 26, 28 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு ராமநாதபுரம் செல்லும் சிறப்பு ரெயிலும் (வண்டி எண்.06103), மறுமார்க்கமாக, ராமநாதபுரத்தில் இருந்து வரும் 27, 29 ஆகிய தேதிகளில் காலை 10.55 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயிலும் (06104) ரத்து செய்யப்படுகிறது.

திருச்சியில் இருந்து வரும் 27, 28, 29, 31 ஆகிய தேதிகளில் காலை 5.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயிலும் (06190), மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வரும் 27, 28, 29, 31 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயிலும் (06191) ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள முழு விபரம்:-





மேலும் செய்திகள்