நடத்தையில் சந்தேகம்: கணவரை கத்தியால் குத்திய மனைவி கைது
|நடத்தை சந்தேகத்தில் கணவரை கத்தியால் குத்திய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கிளாவடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் மாரியப்பன். இவருடைய மனைவி கோகிலா. மாரியப்பன் தென்காசியில் ஸ்வீட்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 4-ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். மாரியப்பன் மீது அவரது மனைவி கோகிலா நடத்தையில் சந்தேகப்பட்டு உள்ளார்.
இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இதே போல் நேற்று முன்தினம் மாலையும் தகராறு ஏற்பட்டது. அப்போது கோகிலா, மாரியப்பனின் முதுகில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த மாரியப்பன் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து சங்கரன்கோவில் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகிலாவை கைது செய்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனை மனைவி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.