< Back
மாநில செய்திகள்
Supporting actress Meena arrested with drugs in Chennai
மாநில செய்திகள்

சென்னையில் போதைப்பொருளுடன் துணை நடிகை மீனா கைது

தினத்தந்தி
|
9 Nov 2024 4:30 PM IST

மீனா, டெடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகையாகவும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

சென்னை,

சென்னையில், தொடர்ச்சியாக அதி நவீன விலை உயர்ந்த போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை ராயப்பேடை அருகே பொதைப்பொருள் விற்பனை செய்த நபர் ஒருவரை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருடன் சேர்ந்து பெண் ஒருவரும் இந்த விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த பெண்ணை இன்று போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பெயர் மீனா என்பதும், அவர் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக இருந்து வருவதும், தொடர்ச்சியாக இப்பகுதியில் இதே போன்று போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, இவருக்கு பின்புலத்தில் உள்ளது யார், இவர் யாரிடம் இருந்து இந்த மெத்தபெட்டமைன் போதைப்பொருளை வாங்குகிறார் என்பது குறித்த தகவல் விரைவில் தெரிய வரும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை மீனா, டெடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகையாகவும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

மேலும் செய்திகள்