< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மதுரையில் கோவில் வளாகத்திற்குள் திடீரென காணப்பட்ட சுக்கிரன் சிலை - போலீஸ் விசாரணை
|16 Nov 2024 8:25 PM IST
மதுரையில் கோவில் வளாகத்திற்குள் திடீரென காணப்பட்ட சுக்கிரன் சிலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை,
மதுரை சோழவந்தான் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஜெனகை நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் துப்புரவு பணியாளர் பாண்டியம்மாள் என்பவர் தூய்மைப் பணியில் ஈடுபட்டபோது, கோவில் வளாகத்திற்குள் சுக்கிரன் கற்சிலை இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கோவில் வளாகத்திற்குள் திடீரென காணப்பட்ட சிலை குறித்து சோழவந்தான் காவல்துறை மற்றும் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கோவில் செயல் அலுவலர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அந்த சிலை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. சாமி கும்பிடுவதற்காக சிலையை கொண்டு வந்து வைத்தார்களா? அல்லது வேறு இடத்தில் திருடிய சிலையை இங்கு வந்து வைத்துவிட்டு சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.