< Back
மாநில செய்திகள்
இயற்கை உபாதை கழிக்க முடியாமல் அவதி... தொழிலாளி எடுத்த விபரீத முடிவு
மாநில செய்திகள்

இயற்கை உபாதை கழிக்க முடியாமல் அவதி... தொழிலாளி எடுத்த விபரீத முடிவு

தினத்தந்தி
|
2 Jan 2025 9:49 PM IST

இயற்கை உபாதை கழிக்க முடியாமல் தொழிலாளி அவதி அடைந்து வந்தார்.

நாகை,

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ராஜீவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர்(வயது 44). இவர், மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வந்தார். இதனால் அவர் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒரு வார காலமாக அவர் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் தனது கழுத்து, வயிறு, இடது கை மணிக்கட்டு ஆகிய இடங்களில் தன்னைத்தானே பிளேடால் அறுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாகை அருகே ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்