< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திடீர் உடல்நலக் குறைவு- கே.என்.நேரு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்
|27 Nov 2024 2:48 AM IST
உடல் நலக்குறைவால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட கே.என்.நேரு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்.
சென்னை,
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவிற்கு சில நாட்களாகவே லேசான காய்ச்சல் இருந்து வந்தது. இந்த நிலையில், அவருக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமானதால், சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று காலை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் குழுவினர் சில பரிசோதனைகளை செய்து, தேவையான சிகிச்சைகளை அளித்தனர். சிகிச்சைக்கு பின்னர் அமைச்சர் கே.என்.நேரு மதியம் வீடு திரும்பினார்.