< Back
மாநில செய்திகள்
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் காம்பவுண்டு சுவர் உள்வாங்கியது
மாநில செய்திகள்

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் காம்பவுண்டு சுவர் உள்வாங்கியது

தினத்தந்தி
|
15 Oct 2024 4:27 PM IST

அடுக்குமாடி குடியிருப்பின் சுவர்கள் விரிசல் அடைந்துள்ளது.

சென்னை,

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள், குடியிருப்பு பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தொடர் கனமழையால் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி காம்பவுண்டு சுவர் 150 அடி நீளத்திற்கு, சில அடி ஆழத்திற்கு விரிசல் விட்டு உள்வாங்கியுள்ளது. மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளின் சுவர்கள் முழுவதும் விரிசல் அடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு அருகில் அடுக்குமாடி உணவகம் ஒன்று கடந்த சில மாதங்களாக ராட்சத இயந்திரங்கள் கொண்டு கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்