< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி சப்-இன்ஸ்பெக்டர் பலி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி சப்-இன்ஸ்பெக்டர் பலி

தினத்தந்தி
|
6 Dec 2024 2:35 AM IST

விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை ,

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் முத்து(வயது 52). இவர் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சிக்கு தேர்வாகி பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று காலையில் பயிற்சிக்கு சென்று விட்டு பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த அவர் நெல்லை டக்கரம்மாள்புரம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த பயணிகள் ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே முத்து பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்