< Back
மாநில செய்திகள்
மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய விவகாரம்: தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்
மாநில செய்திகள்

மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய விவகாரம்: தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

தினத்தந்தி
|
14 Nov 2024 1:58 AM IST

அரசு பள்ளியில் மாணவர்களின் வாயில் டேப் ஒட்டப்பட்டதாக பெற்றோர்கள் புகார் அளித்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள அய்யம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் வாயில் டேப் ஒட்டப்பட்டதாக மாணவர்களின் பெற்றோர், தலைமை ஆசிரியை மீது தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வகுப்பு ஆசிரியை சிறிது நேரம் ஒரு மாணவனை பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு மற்றொரு வகுப்பறைக்கு சென்றபோது மாணவர்களே வாயில் டேப் ஒட்டியதாகவும், அதனை மற்றொரு ஆசிரியை புகைப்படம் எடுத்து பரப்பியதும் தெரிய வந்தது.

இந்த நிலையில் அய்யம்பட்டி பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியை புனிதா, ஆசிரியைகள் பெல்ஸி சுமாகுலேட் பெர்சி மற்றும் முருகேஸ்வரி ஆகிய 3 பேரையும் வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்து வட்டாரக்கல்வி அலுவலர் தமிழ்வாணன் நேற்று உத்தரவிட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்