< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சேலம்: தாம்பூல தட்டில் நடனமாடி உலக சாதனை படைத்த மாணவிகள்
|1 Jan 2025 5:47 PM IST
தாம்பூல தட்டில் நடனமாடி 250 மாணவிகள் உலக சாதனை படைத்தனர்.
சேலம்,
சேலம் மாவட்டம் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் உலக சாதனை பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதுரை ருத்ரா நாட்டிய கலைக்கூடம் சார்பில் 3 முதல் 15 வயது வரையுள்ள 250 மாணவிகள் தாம்பூல தட்டில் நின்றபடி நாட்டியமாடி அசத்தினர்.
கோவிலுக்கு வந்த பக்தர்கள் மாணவிகளின் முயற்சியை பாராட்டினர். இடைவிடாது இரண்டு மணி நேரம் நடனமாடி உலக சாதனை படைத்த மாணவிகளின் ஆட்டத்தை, நோபல் உலக சாதனை புத்தகம் அங்கிகரித்து, உலக சாதனையாக அறிவித்து அதற்கான சான்றிதழை வழங்கியது.