< Back
மாநில செய்திகள்
மாணவி வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்த கோர்ட்டு அனுமதி
மாநில செய்திகள்

மாணவி வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்த கோர்ட்டு அனுமதி

தினத்தந்தி
|
4 Feb 2025 7:10 PM IST

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

சென்னை,

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த குழுவின் பரிந்துரை பேரில் ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த சூழலில் இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) வெளியானது சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அதே சமயம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், எழும்பூரில் உள்ள சிறைத்துறை அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்த சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு சைதாப்பேட்டை கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இதன்படி வரும் 6ம் தேதி புழல் சிறையிலிருந்து தடயவியல் துறை அலுவலகத்திற்கு அழைத்து வர சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்