< Back
மாநில செய்திகள்
கடலூரில் தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 8-ம் வகுப்பு மாணவன் - போலீஸ் விசாரணை
மாநில செய்திகள்

கடலூரில் தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 8-ம் வகுப்பு மாணவன் - போலீஸ் விசாரணை

தினத்தந்தி
|
29 Dec 2024 5:46 PM IST

கடலூரில் தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 8-ம் வகுப்பு மாணவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்,

கடலூர்-சிதம்பரம் சாலையில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி கடலூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் மருத்துவமனைக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்காத நிலையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என தெரியவந்தது.

இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொலைபேசி எண்ணை போலீசார் ஆய்வு செய்தனர். ஆய்வில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விழுப்புரத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் என்பதும், கடலூரில் உறவினர் வீட்டிற்கு வந்திருந்தபோது இந்த செயலில் மாணவன் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து மாணவனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்