< Back
மாநில செய்திகள்
பள்ளிக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் மாணவர் தற்கொலை

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

பள்ளிக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் மாணவர் தற்கொலை

தினத்தந்தி
|
2 Dec 2024 9:59 PM IST

பள்ளிக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் மாரசந்திரம் அருகே குப்பச்சிபாறையை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஜெய்கிஷோர் (16 வயது). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார். சம்பவத்தன்று ஜெய் கிஷோர் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என கூறியுள்ளார். இதனை தாய் மது கண்டித்துள்ளார்.

இதில் மனம் உடைந்த ஜெய் கிஷோர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்