புயல் எதிரொலி; கோவளத்தில் கடல் கொந்தளிப்பு; 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது
|பெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் சூழலில், பலத்த சூறைக்காற்றால் கோவளம் கடல் பகுதி கொந்தளிப்புடன் உள்ளது.
கோவளம்,
வங்கக்கடலில் நேற்று உருவான 'பெஞ்சல்' புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் எனவும், இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெஞ்சல் புயலை முன்னிட்டு, சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட கோவளத்தில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது பெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், பலத்த சூறைக்காற்றால் கோவளம் கடல் பகுதி கொந்தளிப்புடன் உள்ளது. காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், உயரே வளர்ந்து நிற்கும் தென்னை, பனை உள்ளிட்ட மரங்கள் காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அசைந்து, ஆடுகின்றன.