பெஞ்சல் புயல்: பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைப்பு
|1 லட்சம் கிலோ அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
சென்னை,
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் , காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை கொட்டியது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புயலின் கோரத்தாண்டவத்தால், அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அந்த 3 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன.மேலும் இந்த புயல் காரணமாக திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டியதால், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுவரை இல்லாத அளவிற்கு மழைப்பொழிவு ஏற்பட்டு, மக்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தி.மு.க சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து 1 லட்சம் கிலோ அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன. கொடியசைத்து வாகனத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார் .