விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
|விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக அதிகாரப்பூர்வமாக இந்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் அக்கட்சிக்கு தேர்தல் சின்னமாக பானை சின்னமும் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக அதிகாரப்பூர்வமாக இன்று இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை அடுத்து இந்திய தேர்தல் ஆணையம் இந்த அங்கீகாரத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அளித்துள்ளது. மேலும் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி பானை சின்னம் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.