< Back
மாநில செய்திகள்
வி.சி.க.வுக்கு மாநில கட்சி அங்கீகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மாநில செய்திகள்

வி.சி.க.வுக்கு மாநில கட்சி அங்கீகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தினத்தந்தி
|
11 Jan 2025 9:05 AM IST

திருமாவளவன் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை எண்ணி பாராட்டுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்று அறிவித்ததுடன் அதற்கு பானை சின்னத்தையும் இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை அடுத்து இந்திய தேர்தல் ஆணையம் இந்த அங்கீகாரத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அளித்துள்ளது.

மாநிலக்கட்சியாக அங்கீகரிக்கப்பட்டதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.

அன்புச் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இதை எண்ணிப் பாராட்டுகிறேன்.

இவ்வாறு அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.



மேலும் செய்திகள்