< Back
மாநில செய்திகள்
டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல்; கிண்டி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
மாநில செய்திகள்

டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல்; கிண்டி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

தினத்தந்தி
|
14 Nov 2024 9:26 AM IST

டாக்டர் பாலாஜி ஜெகந்நாதன் என்பவரை விக்னேஷ் என்ற இளைஞர் நேற்று கத்தியால் தாக்கினார்.

சென்னை, ,

சென்னை கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் பணியாற்றி வரும் டாக்டர் பாலாஜி ஜெகந்நாதன் என்பவரை பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் நேற்று கத்தியால் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர் காவல் துறையினரால் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை , கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் , கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிய பரிசோதனைக்கு பிறகே மருத்துவமனை ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.பொதுசிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு மட்டுமே இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்