< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
|10 Nov 2024 7:51 AM IST
தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமேஸ்வரம்,
ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து பணி சென்ற இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களது 3 விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்