சேலம் வழியாக செங்கோட்டை, கோவைக்கு சிறப்பு ரெயில்கள்
|தீபாவளி பண்டிகையையொட்டி, சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
சேலம்,
தீபாவளி மற்றும் வட மாநில சாத் பண்டிகையை முன்னிட்டு கோவை - பீகார் மாநிலம் பரவுனி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி கோவை- பரவுனி சிறப்பு ரெயில் (06055) நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 16-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் கோவையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக மதியம் 2.47 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 2.50 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர், நெல்லூர் வழியாக திங்கட்கிழமை மதியம் 2.30 மணிக்கு பரவுனி சென்றடையும்.
இதேபோல் மறுமார்க்கத்தில் பரவுனி - கோவை சிறப்பு ரெயில் (06056) வருகிற 29-ந் தேதி முதல் வருகிற 19-ந் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் பரவுனியில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக வியாழக்கிழமை இரவு 11.40 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 11.42 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக அதிகாலை 3.45 மணிக்கு கோவை சென்றடையும்.
அதேபோல, கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது, அதன்படி ஹூப்ளி - கொல்லம் சிறப்பு ரெயில் (07313) நாளை (சனிக்கிழமை) ஹூப்ளியில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சேலம் வந்தடையும், இங்கிருந்து 3.40 மணிக்கு புறப்பட்டு கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன் கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை வழியாக மாலை 5.10 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் கொல்லம் - ஹூப்ளி சிறப்பு ரெயில் (07314) நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொல்லத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக மறுநாள் காலை 7.10 மணிக்கு சேலம் வந்தடையும், இங்கிருந்து 7.15 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு வழியாக இரவு 8.45 மணிக்கு ஹூப்ளி சென்றடையும்.
இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.