சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரெயில்
|மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
சென்னை,
தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரலில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06079), மறுநாள் மதியம் 12.45 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து நாளை (திங்கட்கிழமை) மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06080), மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த ரெயில் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.