< Back
மாநில செய்திகள்
விழுப்புரம் - செகந்திராபாத் இடையே சிறப்பு ரெயில்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
மாநில செய்திகள்

விழுப்புரம் - செகந்திராபாத் இடையே சிறப்பு ரெயில்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தினத்தந்தி
|
7 Nov 2024 8:10 PM IST

விழுப்புரம் - செகந்திராபாத் இடையே சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரத்தில் இருந்த நாளை (8-ந்தேதி), 15 ஆகிய தேதிகளில் மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு செகந்திராபாத் செல்லும் சிறப்பு ரெயில்(வண்டி எண்.07602), மறுநாள் காலை 9.40 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

மறுமார்க்கமாக, ஐதராபாத் மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து வரும் 14-ந்தேதி இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வரும் சிறப்பு ரெயில்(07601), மறுநாள் மதியம் 1.05 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்