< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருச்சி-ஆமதாபாத் இடையே சிறப்பு ரெயில்
|5 Jan 2025 2:39 AM IST
சென்னை எழும்பூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சியில் இருந்து இன்று (5-ந் தேதி) காலை 5.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.09420) தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், பெரம்பூர் மற்றும் வழியாக மறுநாள் இரவு 9.15 மணிக்கு ஆமதாபாத் சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.