< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ரெயில்வே தேர்வு எழுத செல்பவர்களின் வசதிக்காக திருவனந்தபுரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்
|24 Nov 2024 6:23 AM IST
திருவனந்தபுரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை,
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தில் ரெயில்வே தேர்வு (ஆர்.ஆர்.பி.) நடைபெற இருப்பதால் தேர்வு எழுத செல்பவர்களின் வசதிக்காக திருவனந்தபுரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
திருவனந்தபுரம் சென்டிரலில் இருந்து இன்று (24-ந் தேதி) முதல் 28-ந் தேதி வரை இரவு 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06065), அதேநாள் இரவு 10.40 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து நாளை (25-ந் தேதி) முதல் 29-ந் தேதி வரை அதிகாலை 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06066), அதேநாள் அதிகாலை 3.25 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.