< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தீபாவளி பண்டிகை: தாம்பரம்-நெல்லை சிறப்பு ரெயில்
|23 Oct 2024 1:33 PM IST
தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சென்னை தாம்பரம்- நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலியில் இருந்து நவம்பர் 3-ம் தேதி (ஞாயிற்று கிழமை) மதியம் 2.00 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06003), மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து நவம்பர் 4 -ம் தேதி (திங்கள் கிழமை) மதியம் 02.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06004), மறுநாள் காலை 5.15 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு:-