< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ராமநாதபுரம் - தாம்பரம் இடையே நாளை சிறப்பு ரெயில்
|2 Nov 2024 2:15 AM IST
சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற பயணிகள் வசதிக்காவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ராமநாதபுரம் - தாம்பரம் இடையே நாளை (3-ந்தேதி) ஒரு நாள் மட்டும் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
அந்த வகையில், ராமநாதபுரத்தில் இருந்து நாளை மதியம் 3 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண்.06162) அதே நாள் இரவு 11.40 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் வந்தடையும். பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருதாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக இந்த ரெயில் தாம்பரம் வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.