< Back
மாநில செய்திகள்
தீபாவளியை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் -போத்தனூர் இடையே சிறப்பு ரெயில்
மாநில செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் -போத்தனூர் இடையே சிறப்பு ரெயில்

தினத்தந்தி
|
26 Oct 2024 5:11 AM IST

மறுமார்க்கமாக, கோவையில் இருந்து இந்த ரெயில் சென்னை சென்ட்ரலுக்கு புறப்படுகிறது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 29 மற்றும் நவம்பர் 2 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06021), பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு வழியாக திருப்பூர் சென்று அங்கிருந்து கோவை செல்லாமல் மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.

மறுமார்க்கமாக, கோவையில் இருந்து வரும் 31 மற்றும் நவம்பர் 4 ஆகிய தேதிகளில் இரவு 12.15 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06022), அதேநாள் காலை 9.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரெயில் போத்தனூரில் இருந்து புறப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்