சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கம்
|விமான நிலையத்தில் உள்ள மக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னை,
வங்கக்கடலில் நேற்று உருவான பெஞ்சல் புயல், காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (சனிக்கிழமை) மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அதன்படி சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் ஓட்டல்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.கனமழை எதிரொலியாக சென்னையில் இன்று விமானங்கள் ரத்து செய்யப்ட்டுள்ளது .
இந்த நிலையில் , விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், விமான நிலையத்தில் உள்ள மக்கள் வசதிக்காக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. விமான நிலையத்தில் இருந்து பிராட்வே, கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.