< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு: ஆஸ்திரேலியா செல்லும் சபாநாயகர் அப்பாவு - முதல்-அமைச்சர் வாழ்த்து
|3 Nov 2024 12:27 AM IST
சபாநாயகர் அப்பாவு ஆஸ்திரேலியா செல்வதையொட்டி, அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை,
67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு வருகிற 5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக பிரதிநிதியாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொள்கிறார். அவருடன் பேரவைச் செயலர் கி.சீனிவாசன், கூடுதல் செயலர் பா.சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதற்காக 15 நாள் பயணமாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இந்த நிலையில் காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ஆஸ்திரேலியா செல்வதையொட்டி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (சனிக்கிழமை) தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவைத் தலைவர் அறையில், அவரை சந்தித்து, அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.