< Back
மாநில செய்திகள்
சமூக நீதி என்பது ஒரு கட்சிக்கு மட்டுமே சொந்தமானது அல்ல - கவர்னர் ஆர்.என்.ரவி
மாநில செய்திகள்

'சமூக நீதி என்பது ஒரு கட்சிக்கு மட்டுமே சொந்தமானது அல்ல' - கவர்னர் ஆர்.என்.ரவி

தினத்தந்தி
|
26 Nov 2024 10:09 PM IST

சமூக நீதி என்பது ஒரு அரசியல் கட்சிக்கு மட்டுமே சொந்தமானது அல்ல என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தேசிய அரசியலமைப்பு தினத்தையொட்டி, சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் சட்ட கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், செய்தித்தாள்களில் சமூகநீதி குறித்த செய்திகள் வருகிறது, ஆனால் குடிநீர் தொட்டியில் ஒரு சமுதாயத்தினர் அருவெறுக்கத்தக்க செயலை செய்துள்ளனர் என்று விமர்சித்தார்.

மேலும் சமூக நீதி என்பது குறிப்பிட்ட இயக்கத்திற்கு, அரசியல் கட்சிக்கு மட்டுமே சொந்தமானது இல்லை என்று குறிப்பிட்ட ஆர்.என்.ரவி, அது அனைவருக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை என்று கூறினார். மொழியை வைத்து சிலர் பிரிவினையில் ஈடுபடுகிறார்கள் என்று குற்றம்சாட்டிய அவர், மொழியினால் ஏற்படும் பிரிவினைவாதம் ஆபத்தானது என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்