< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருச்சியில் ரூ.15 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
|26 Dec 2024 3:55 PM IST
திருச்சி விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி,
திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு பயணியின் பையில் இருந்த சிலிண்டர் ரெகுலேட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 194 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கடத்தல் தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.15 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.