அவதூறு பேச்சு: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் கைது
|அர்ஜுன் சம்பத்தின் மகன், ஓம்கார் பாலாஜியை கோவை பந்தய சாலை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை,
ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பி வருவதாக, தனியார் வார இதழை கண்டித்து கோவையில் இந்து மக்கள் கட்சி போராட்டம் நடத்தியது. இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தில், அர்ஜுன் சம்பத்தின் மகனும், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜியும் கலந்துகொண்டு பேசினார்
அப்போது,மிரட்டல் விடுக்கும் வகையில் ஓம்கார் பாலாஜி பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கிரிமினல் குற்ற நோக்கத்துடன் செயல்படுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ், ஓம்கார் பாலாஜி மீது கோவை பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சூழலில், ஓம்கார் பாலாஜி கைதைக் கண்டித்து இன்று காலை 11 மணியளவில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் நடத்த அக்கட்சி தலைமை அழைப்பு விடுத்திருந்தது.