முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு: குமரி வாலிபர் கைது
|முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பிய குமரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னையில் உள்ள ஒரு மேம்பால சுவரில் ஒட்டப்பட்டுள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்துடன் அடங்கிய சுவரொட்டி மீது மூதாட்டி ஒருவர் அவதூறு ஏற்படுத்துவது போல் சித்தரித்து புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுறித்த புகாரின் பேரில் சென்னை ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வீடியோவை எடுத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். சென்னையில் உள்ள ஒரு கார் நிறுவனத்தில் பணிபுரியும் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள அஞ்சுகண்டறை பகுதியை சேர்ந்த பிரதீஷ் என்பவர்தான் அந்த வீடியோவை எடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவரை சென்னை ஆர்.கே.நகர் போலீசார் நேற்று காலையில் அஞ்சுகண்டறையில் உள்ள அவரது வீட்டுக்கு வந்து கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.