< Back
மாநில செய்திகள்
சிவகங்கையில் நகைகளை வைத்து மோசடி - வங்கி மேலாளர் கைது
மாநில செய்திகள்

சிவகங்கையில் நகைகளை வைத்து மோசடி - வங்கி மேலாளர் கைது

தினத்தந்தி
|
20 Oct 2024 10:32 AM IST

சிவகங்கையில் நகைகளை வைத்து மோசடி செய்ததாக எழுந்த புகாரில் வங்கி மேலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் செயல்படும் தனியார் வங்கியில், மண்டல மேலாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான குழுவினர் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்தபோது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து அந்த நகைகளை பரிசோதனை செய்தபோது, வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த தங்க நகைகளுக்கு பதிலாக, அந்த நகைகளைப் போலவே உள்ள கவரிங் நகைகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், வங்கி மேலாளர் உள்ளிட்ட பணியாளர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மொத்தமாக வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த 533 சவரன் தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு சுமார் 2 கோடியே 3 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாரிடம் மண்டல மேலாளர் கிருஷ்ணகுமார் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், கல்லல் வங்கி மேலாளர் விக்னேஷ், உதவி மேலாளர் ராஜாத்தி, மோசடிக்கு உதவி செய்த ரமேஷ், சதீஷ் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.


மேலும் செய்திகள்