< Back
மாநில செய்திகள்
தாய்க்கு தெரிந்த நபருடன் பள்ளிக்கு சென்ற சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி
மாநில செய்திகள்

தாய்க்கு தெரிந்த நபருடன் பள்ளிக்கு சென்ற சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி

தினத்தந்தி
|
20 Nov 2024 3:47 AM IST

தனது மகளை பள்ளியில் கொண்டு விடுமாறு தனக்கு தெரிந்த நபரிடம் பெண் ஒருவர் கூறியுள்ளார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் கண்டக்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 56). பொதுப்பணித்துறை ஊழியரான இவர் கடலூர் சுற்றுலா மாளிகையில் கடந்த 15 ஆண்டுகளாக தோட்ட வேலை செய்து வருகிறார்.

சண்முக சுந்தரத்தை தனக்கு நன்கு தெரியும் என்பதால், அதே பகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் அவரிடம் ஒரு உதவி கேட்டுள்ளார். அதாவது, தான் வெளியூரில் இருப்பதால் 10-ம் வகுப்பு படித்து வரும் தனது 15 வயது மகளை பள்ளிக்கு அழைத்துக்கொண்டு விடுமாறு செல்போனில் கூறியுள்ளார். அதன் பேரில் சண்முகசுந்தரம் காலையில் அந்த பெண் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். தனது தாய்க்கு தெரிந்தவரான சண்முக சுந்தரத்துடன் சிறுமி பள்ளிக்கு சென்றார்.

பின்னர் மாலையில் மீண்டும் பள்ளிக்கு வந்த சண்முக சுந்தரம், சிறுமியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு சென்றார். சிறுமியை அவளது வீட்டில் விடாமல் தனது வீட்டுக்கு அழைத்துச்சென்ற சண்முகசுந்தரம், அங்கு வைத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது பற்றி சிறுமி தனது தாயிடம் அழுதபடி கூறினாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், கடலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்