< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதி
|26 Nov 2024 8:36 AM IST
மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சக்தி காந்ததாஸ் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை
தற்போது ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருப்பவர் சக்திகாந்த தாஸ் (வயது 67) இவர், ஒடிசாவைச் சேர்ந்தவர் ஆவார். ஆனால், தமிழக கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. தமிழக அரசில் பல துறைகளில் பணியாற்றி உள்ளார். மத்திய நிதி செயலராக பணியாற்றியவர். சக்திகாந்த தாஸ் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி கவர்னராக பணியாற்றி வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்தமாதம் நிறைவடைய உள்ளது.
இந்தநிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நெஞ்சு வலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சக்திகாந்த தாஸ் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்ததாஸுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.