< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: அ.தி.மு.க. நிர்வாகி போக்சோவில் கைது

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: அ.தி.மு.க. நிர்வாகி போக்சோவில் கைது

தினத்தந்தி
|
31 Oct 2024 6:48 AM IST

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அ.தி.மு.க. நிர்வாகி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பண்ணவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பநாதன். இவருடைய மகன் தீபன்(வயது 33). இவர், தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளராக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார். தீபன் அதே பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் தீபனை கைது செய்து பட்டுக்கோட்டை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்