< Back
மாநில செய்திகள்
பள்ளி வாகனத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - டிரைவர் கைது

கோப்புப்படம்

மாநில செய்திகள்

பள்ளி வாகனத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - டிரைவர் கைது

தினத்தந்தி
|
22 Nov 2024 6:32 AM IST

பள்ளி வாகனத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நடுத்தெருவைச் சேர்ந்தவர் இஸ்மத் இனூன் (37 வயது). டிரைவர். இவர் பள்ளி வாகனம் ஒன்றை ஓட்டி வந்தார். அப்போது அதில் வந்த 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினாள்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது தொடர்பாக கீழக்கரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தாமரைச்செல்வி விசாரணை நடத்தினார். அப்போது பள்ளி வாகனத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து டிரைவர் இஸ்மத் இனூனை கைது செய்தார்.

மேலும் செய்திகள்