< Back
மாநில செய்திகள்
பாலியல் வன்கொடுமை: இளம்பெண் அளித்த புகாரில் பாடகர் குருகுகன் கைது
மாநில செய்திகள்

பாலியல் வன்கொடுமை: இளம்பெண் அளித்த புகாரில் பாடகர் குருகுகன் கைது

தினத்தந்தி
|
18 Nov 2024 3:17 PM IST

பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் அளித்த புகாரில், பாடகர் குருகுகன் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான பாடகர் குருகுகன் மீது சென்னை பரங்கிமலையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருந்தார். அதில் தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி கர்ப்பமாக்கியதாகவும், பின்னர் சாதியை சொல்லி திருமணம் செய்ய மறுத்துவிட்டு வெளிநாடு தப்பி செல்ல முயற்சிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த புகாரில் பாடகர் குருகுகனை போலீசார் இன்று கைது செய்தனர். இளம்பெண் கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, பொய்யான உத்தரவாதம், மிரட்டி ஆதாரங்களை அழிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் குருகுகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்