< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ரூ.25 கோடி மதிப்புள்ள நவபாஷாண சிலை பறிமுதல்
|22 Dec 2024 9:43 PM IST
திருவண்ணாமலையில் ரூ.25 கோடி மதிப்புள்ள நவபாஷாண சிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் ரூ.25 கோடி மதிப்புள்ள நவபாஷாண சிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நவபாஷாண முருகன் சிலை 10 கிலோ எடை கொண்டது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.35 லட்சம் மதிப்பிலான ஒரு அடி உயரம் கொண்ட யானை தந்தத்தினால் செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு சிலைகளையும் மத்திய வனவிலங்கு குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், சிலையை கடத்தி வந்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.