< Back
மாநில செய்திகள்
தடையின்றி இயங்கும் புறநகர் மின்சார ரெயில் சேவை
மாநில செய்திகள்

தடையின்றி இயங்கும் புறநகர் மின்சார ரெயில் சேவை

தினத்தந்தி
|
15 Oct 2024 6:52 PM IST

மின்சார ரெயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

சென்னை,

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையிலும் சென்னையில் புறநகர் மின்சார ரெயில் சேவைகள் தடையின்றி இயக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி தொடர்ச்சியாக மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் ரெயில்களில் மாலை 5 மணியில் இருந்து மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. புறநகர் ரெயில்கள் சீராக இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் புறநகர் ரெயில் சேவைகள் தொடர்பாக பயணிகள் அறிந்து கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 044-2533 0952 6 044-2533 0953 எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் குறைவான வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும். இதனால் ரெயில்கள் தாமதம் ஆகலாம். வானிலை நிலவரத்தை பொறுத்து, ரயில்கள் பகுதி நேரமாகவோ முழுவதுமாகவோ ரத்து செய்யப்படலாம். பொதுமக்கள் மிகவும் அவசியமாக இருந்தால் மட்டும் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்